அதிபர், ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை…

நாட்டிலுள்ள அதிபர், ஆசிரியர்களுக்கு முதற் தடவையாக உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதுவரை காலம் உத்தியோகபூர்வ அடையாள அட்டை விநியோகிக்கப்படாமையால், தற்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டார்.