தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய மேலும் 66 பேர் கைது!
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 66 பேர் கைதுசெய்யப்பட்டுள்னர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 188 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் வெளியேறும் 13 இடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 82 வாகனங்களில் வந்த 160 திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.