மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதி குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் திருகோணமலை – தம்புள்ளை வீதி, ஹிரிவடுன்ன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்தினர் ஹபரண வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
ஹபரண பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.