முதன் முறையாக பெண் பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்…

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான பெண்கள் மூவர், பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
உடன் அமுலாகும் வகையில் இவர்கள் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில், பெண் பொலிஸ் அதிகாரிகள் பிரதி பொலிஸ்மா அதிபர்களாகத் தரமுயர்த்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய ரேணுகா ஜயசுந்தர, நிஷாந்தி ஜயசுந்தர, பத்மினி வீரசூரிய ஆகியோரோ இவ்வாறு பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.