கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே துர்கா பூஜையில் புஷ்பாஞ்சலி செய்ய அனுமதி
கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே துர்கா பூஜையில் புஷ்பாஞ்சலி செய்ய அனுமதி வழங்கப்படும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று முதல் 9 நாள்களுக்கு நடைபெறுகிறது. நவராத்திரி விழாவையொட்டி கொரோனா பரவலைத் தடுக்கும்பொருட்டு அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில், கொல்கத்தாவில் துர்கா பூஜையில் துர்கா சிலைகளுக்கு பொதுமக்கள் புஷ்பாஞ்சலி செய்வதும் நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமி நாளன்று பெண்கள் ஒருவருக்கொருவர் முகத்தில் செந்தூரம் பூசியும் கொண்டாடுவர். இதற்காக பொது இடங்களில் துர்கா சிலைகள் வைக்கப்படும்.
இந்த நிகழ்வுகளுக்கு தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் துர்கா சிலை வைக்கப்பட்டுள்ள பெரிய பந்தல்களில் 45 முதல் 60 பேருக்கும், சிறிய பந்தல்களில் 10 முதல் 15 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
துர்கா பூஜையின் கடைசி நாளான விஜயதசமி அன்று, திருமணமான வங்காள இந்து பெண்கள், துர்காவில் நெற்றியில் மற்றும் காலில் குங்குமம் வைத்து வழிபடுவதுடன் பெண்கள் ஒருவருக்கொருவரும் முகத்தில் குங்குமம் பூசி பின்னர் இனிப்புகளை வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெறும்.