சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு தொடர்பான அறிவிப்பு….

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், பெறுபேறு மீளாய்வுக்காக ஒன்லைன் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.