அமெரிக்க கடற்படை எஃப்18 போர் விமானம் விபத்து !

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான எஃப்/ஏ 18 சூப்பர் ஹார்னெட் ரக போர் விமானம் இன்று கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள டெத் வேல்லி பகுதியில் விபத்துக்குள்ளானது.
இதில் விமானம் முற்றிலும் சேதமான நிலையில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார், சிறிய காயங்களுடன் அவர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானம் சைனா லேக் பகுதியில் உள்ள கடற்படை வான் ஆயுத தளத்தில் இருந்து இயங்கும் வான் சோதனை படையணியை சேர்ந்த விமானம் ஆகும்.
பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில் அமெரிக்க கடற்படை இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.