நுவரெலியா − ராகலை பகுதியில் அதிகாலையில் இடம்பெற்ற பேரனர்த்தம்!

நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள வீடொன்றில் தீ பரவியதால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒரு முதியவர், 2 பெண்களும், 1 மற்றும் 11 வயது குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது.
இவர்களின் வீட்டில் திடீரென தீ பரவியதால் உடல் கருகி இவர்கள் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.