ஜப்பான் நிலநடுக்கம்; காயமடைந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு.

ஜப்பானில் டோக்கியோ நகரில் நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவானது என முதலில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு 5.9 என குறைத்து அறிவிக்கப்பட்டது.
இந்நிலநடுக்கத்திற்கு 5 பேர் காயமடைந்து உள்ளனர் என்று முதற்கட்ட தகவல் தெரிவித்தது. இந்நிலையில், காயமடைந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்து உள்ளது என கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.