நுரையீரல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம்.
நீண்ட நாள் உயிருடன் வாழ வேண்டுமானால், ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நுரையீரல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் நுரையீரல் தான் சுவாசிக்கும் ஆக்சிஜனை வடிகட்டி, ஒட்டுமொத்த உடலுக்கும் கொண்டு செல்கிறது. நுரையீரலில் பிரச்சனை ஏற்படும் போது, உடலில் ஆக்சிஜன் ஓட்டம் தடைபடத் தொடங்குகிறது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இதுமட்டுமின்றி, ஒருவர் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, காசநோய், ஐஎல்டி, நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு பலியாகலாம்.
ஆனால் பெரும்பாலான மக்கள் ஆரம்பத்திலேயே உடலில் உள்ள நோயைப் புரிந்து கொள்வதில்லை. இதனால் பிரச்சனை தீவிரமாகும் போது, அதைக் கையாள்வது கடினமாக உள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில், நாம் ஒவ்வொருவரும் நுரையீரல் பெரிய ஆபத்தில் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் பிரச்சனையை ஆரம்பதிலேயே தீர்க்க முடியும். கீழே நுரையீரல் நோயின் பிடியில் இருப்பதைக் குறிக்கும் 5 முக்கிய அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் நீண்ட காலமாக நெஞ்சு வலியை அனுபவித்து வந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். ஏனென்றால், இது நுரையீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது தவிர, இருமல் அல்லது மூச்சுத் திணறலை நீண்ட காலம் அனுபவித்தால், அதையும் தவிர்க்க வேண்டாம்.
ஒருவருக்கு சுமார் ஒரு மாதத்திற்கும் அதிகமாக சளி பிரச்சனை இருந்தால், அவருக்கு சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலையில், சற்றும் தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது முக்கியம்.
உங்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், அதுவும் சுமார் 15 நாட்கள் நீடித்திருந்தால், உடனே மருத்துவரை சந்தித்து, பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இந்த நிலைமை தீவிரமடைந்துவிடும்.
உங்களுக்கு ஒரு வாரத்திற்கும் மேலாக இருமல் இருந்தால் அல்லது இருமலின் போது இரத்தம் வந்தால், அது சுவாச அமைப்பின் செயலிழப்பைக் குறிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், வெறும் வீட்டு வைத்தியத்தை மட்டும் நம்ப வேண்டாம். உடனே நிபுணரை சந்தித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
உங்கள் உடல் எடை திடீரென குறைய தொடங்கினால், அதை நினைத்து சந்தோஷப்படாதீர்கள். ஏனெனில் அது உடலுக்குள் வளரும் கட்டிகளின் எச்சரிக்கை மணியாக இருக்கலாம். இம்மாதிரியான சூழ்நிலையில், உடனே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருபோதும் இதை சாதாரணமாக நினைத்து புறக்கணித்துவிடாதீர்கள். பின் மோசமான விளைவை சந்திப்பீர்கள். மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், இவற்றை சாதாரணமாக நினைத்து விடாமல், மருத்துவரை சந்தித்து பரிசோதித்து என்னவென்று தெரிந்து கொண்டு, சிகிச்சை மேற்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும்.