பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் இன்று காலமானார்.
நடந்தால் இரண்டடி உட்பட்ட பெருமளவான பிரபல திரையிசைப் பாடல்கள் எழுதிய தென்னிந்திய திரையிசைப் பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் இன்று காலமானார்.
உயிரிழக்கும்போது அவருக்கு வயது 65. இதுவரை 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஆயிரத்து ஐந்நூறு வரையான பாடல்களை எழுதியுள்ளார்.
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன் செம்பருத்தி படத்தில் ‘நடந்தால் இரண்டடி’ என்ற புகழ்பெற்ற பாடலை எழுதியதன் மூலம் பிரபலமானார்.
ராஜாதி ராஜா படத்தில் மீனம்மா.. மீனம்மா, மாப்பிள்ளை படத்தில் வேறு வேளை உனக்கு இல்லையே, பண்ணக்காரன் படத்தில் சைலன்ஸ் இது காதல் செய்யும் நேரம் இது, அரங்கேற்றவேளை படத்தில் குண்டு ஒன்று வச்சிருக்கேன், அதிசய பிறவி படத்தில் தானந்த கும்மி கொட்டி, கோபுர வாசலிலே படத்தில் காதல் கவிதைகள் எழுதிடும் நேரம், இதயமே படத்தில் இதயமே.. இதயமே, கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டமா தேரோட்டமா, அமரன் படத்தில் வெத்தல போட்ட சோக்குல, சந்திரனே சூரியனே, தங்க மனசுக்காரன் படத்தில் மணிக்குயில் இசைக்குதடி, செம்பருத்தி படத்தில் கடலில் உள்ளிட்ட முக்கியமான பாடங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.