ஆப்கானில் குண்டு வெடிப்பு நூறு பேர் பலி!
தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரின் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் நூறு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குண்டூஸ் நகரின் மசூதியில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் தொழுகைக்காக குழுமியிருந்த போது இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.90 பேர் காயமடைந்துள்ள இந்த குண்டு வெடிப்பின் முழு தகவல்களும் கிடைக்கவில்லை.
இந்த குண்டு வெடிப்பில் 28 பேர் உயிரிழந்திருப்பதாக தலிபான்கள் தெரிவித்திருந்தாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இந்த குண்டு வெடிப்பிற்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என்ற போதிலும் சமீப காலமாக தலிபான்கள் மீது ஐ.எஸ். எல் என்ற அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். முழுமையான ஜிகாதிகளாக தங்களை அறிவித்துக் கொண்ட இவர்கள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தலிபான்கள் சந்தேகிக்கின்றனர்.