பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ள போர்ட் சிட்டி….
இந்த வருடத்திற்குள் கொழும்பு துறைமுக நகரத்தை பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு துறைமுக நகரம் என்பது தற்போதுள்ள கொழும்பு மத்திய வர்த்தக மாவட்டத்தின் விஸ்தரிப்பாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு புத்தம் புதிய நகர அபிவிருத்தித் திட்டம் ஆகும்.
இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மாத்திரமல்லாது உலக பொருளாதாரத்தில் போட்டியிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரம், கடலை நிரப்பி செயற்கையாக உருவாக்கப்பட்ட 269 ஹெக்டேயர் நிலப்பரப்பை கொண்ட பிரதேசமாகும்.பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ள போர்ட் சிட்டி.