சிறுவர் இல்லத்திற்கான புத்தகங்கள் வழங்கி வைப்பு.

சிறகுகள் அமையத்தின் படிப்பகம் செயற்றிட்டத்தினூடாக மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி சக்தி மகளிர் இல்லம் மற்றும் திருஞான சம்பந்தர் குருகுல மாணவர்களுக்கான ஒரு தொகுதிப் புத்தகங்கள் 09.10.2021 அன்று வழங்கிவைக்கப்பட்டது.
சிறகுகள் மட்டு அம்பாறை பிராந்திய தலைவர் திரு பிரியதர்சன் அவர்களின் தலைமையில் செயற்றிட்டம் மட்டு-அம்பாறை சிறகுகள் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.