கோவிந்தராசு கொலை எம்.பி நீதிமன்றத்தில் சரண்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள முந்திரி தொழிற்சாலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி மர்ம முறையில் இறந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக கடலூர் எம்.பி ரமேஷ் சரணடைந்துள்ளார்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டு பின்னர் வாயில் விசம் ஊற்றி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனையடுத்து கோவிந்தராசு சந்தேக மரணம் என பதியப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி கடலூர் எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜ்(31), தொழிலாளர்கள் அல்லா பிச்சை(53), சுந்தர் என்கிற சுந்தர்ராஜ்(31), வினோத்(31), கந்தவேல்(49) ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத், கந்தவேல் ஆகியோரை கைது செய்தனர். அப்போது நடந்த விசாரணையின்போது எம்.பி.யின் உதவியாளர் நடராஜ் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அல்லா பிச்சை உள்ளிட்ட 4 பேர் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தி.மு.க. எம்.பி. ரமேசிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றி கடலூர் எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.