கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல யூடியூபர் உட்பட 4 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் சரண்
கடந்த 26ஆம் தேதி இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து நாகை மாவட்டம் கீச்சான்கும்பம் பகுதியை சேர்ந்த பிரபல யூடியூபரான நாகை மீனவன் குணசீலன் படகிலிருந்து 2 கோடி மதிப்புள்ள 280 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் ஒரு படகு நான்கு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கஞ்சா கடத்திய நான்கு பேரை சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்த படகின் உரிமையாளர் குணசீலன் மற்றும் மற்றுமொரு குணசீலன் விஜய் , சிவச்சந்திரன் குணசீலம் ஆகியோர் தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சரணடைந்தனர்.
சரணடைந்த நால்வருக்கும் நீதிபதி சண்முகவேல் வருகின்ற 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.