இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 67 குழந்தைகள் மரணம்!

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் கடந்த இரு மாதங்களாக தீவிரமடைந்திருந்த நிலையில் தற்போது தொற்று பரவலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
கடந்த இரு மாதங்களாக உலகளவில் அதிக கொரோனா மரணங்களை சந்தித்த நாடாக இலங்கை இருந்தது. இந்நிலையில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுல்ப்படுத்தப்பட்டு தற்போது ஒரளவு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 67 குழந்தைகள் மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இவர்களில் 17 குழந்தைகள் பிறந்து சிறிது நேரத்தில், சிறிது நாட்களில், அல்லது ஒரு மாதத்திற்குள் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.