மீண்டும் கொரோனா கொத்தணிகள் ஏற்படும் அபாயம்….

வழிபாட்டுத் தலங்கள் உட்பட ஏனைய இடங்களில் மக்கள் கூடுவதால் மீண்டும் கொரோனா கொத்தணிகள் ஏற்படும் அபாயம் உள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
எனவே, மத வழிபாடுகளில் ஈடுபடும்போது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுவது முக்கியம் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை, கொவிட் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் ஊடாக வைரஸ் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பழைய இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப முடியும் என்று தான் நம்பவில்லை எனத் தெரிவித்த அவர் தாம் ஒரு புதிய இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் எனவும், அதற்கு பல தசாப்தங்கள் ஆகலாம் எனவும் கூறினார்.
எனவே தாம் பாதுகாப்பாக இருக்க ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவது முக்கியம் எனவும், அவர் தெரிவித்தார்.