covid-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த வேலைத்திட்டம்..
பின்தங்கிய பிரதேசங்களில் covid-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம் மற்றும் மலையகப் பெருந்தோட்ட பகுதிகளை சார்ந்த பின்தங்கிய பிரதேசங்களுக்கு covid-19 தொற்று தொடர்பில் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் அமைப்பு ஆகியன ஒன்றிணைந்து பின்தங்கிய பிரதேசங்களில் covid-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த இந்த வேலைத் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு பின்தங்கிய பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் (11) இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாமேந்திரன் மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் அல் காசிம் (dr. Alka Singh) , UNICEF நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Christian skoog , பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹரிச டி சில்வா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.