அண்ணாத்த பாடல் ஒன்றிற்கு இசை அமைத்த ஈழத்துக்கலைஞன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடித்து வெளியாகவுள்ள “அண்ணாத்த” என்ற திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைக்கின்றார்.
அவர் ஒரு பாடலுக்கு நாதஸ்வர இசை வழங்குவதற்காக ஈழத்தில் இருந்து புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் அழைத்து அவரின் துணைகொண்டு அண்ணாத்த படத்தின் பாடலுக்கு இசையமைத்திருப்பது பெருமைக்குரியது.