ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலாக மாற்று வீரராக வெங்கடேஷ் அய்யர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது 14-வது ஐபிஎல் தொடரானது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த தொடர் முடிந்த சில நாட்களிலேயே அதாவது அக்டோபர் 17ஆம் தேதி உலக கோப்பை டி20 தொடரானது அங்கு துவங்க உள்ளது. இந்த தொடருக்கான அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணியும் கடந்த மாத துவக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் பார்ம் அவுட்டில் இருந்த காரணத்தினால் பிசிசிஐ சற்று வருத்தத்தில் இருந்தது. இருப்பினும் தொடரின் முடிவில் இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள் ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது திறமையை நிரூபித்துள்ளனர். இதற்கிடையில் இந்திய அணியை பெரிய வருத்தத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு விடயமாக ஹார்டிக் பாண்டியாவின் பார்ம் பார்க்கப்படுகிறது.
தற்போதைய உலகக்கோப்பை இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா இருக்கிறார். ஆனால், அவர் காயத்திற்கு பிறகு கடந்த ஒரு வருடமாகவே பெரிதாக பந்து வீசவில்லை.
ஆல்ரவுண்டர் என எடுத்து வைத்துவிட்டு பேட்டிங் மட்டும்தான் செய்வார் எனில் அது செட் ஆகாது. பேட்டர்-பௌலர்கள் சரியான காம்பீனேஷன் இல்லாமல் போகும்.
அதனால் ஹர்திக் பாண்ட்யா குறித்து பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. 16 ஆம் தேதி வரை உலகக்கோப்பை அணியில் மாற்றம் செய்து கொள்ள முடியும். மெண்ட்டர் தோனி, கேப்டன் கோலி, மூன்று தரப்பும் கடைசிகட்ட ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் ஐ.பிமெல் முடிந்த பிறகும் இந்தியாவிற்கு திரும்பிவிடாமல் துபாயிலேயே இருக்குமாறு கூறப்பட்டுள்ளார்.
வெங்கடேஷ் ஐயர் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் நல்ல ஃபார்மில் இருக்கும் 3D வீரர். ஹர்திக்கிற்கு பதில் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வெங்கடேஷ் ஓப்பனிங் பேட்டர் என்பது மட்டுமே நெருடலான விஷயம். மற்றபடி பிரச்சனையில்லை.
2019 ஓடிஐ உலகக்கோப்பையில் இதேமாதிரிதான் அம்பத்தி ராயுடு அல்லது விஜய் சங்கர் இருவரில் யார் என கேள்வி எழுந்த போது, ஆல்ரவுண்டரான விஜய் சங்கரையே பிசிசிஐ டிக் அடித்தது. அவர் ஒரு 3Dimensional Player என காரணமும் கூறியது.
மீண்டும் அதே விளக்கம் கூறப்பட்டாலும் ஆச்சர்யமில்லை
அந்த வகையில் பிசிசிஐ பாண்டியாவுக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயர், பேக் அப் வீரராக தேர்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.