ரஷியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிப்பு.
ரஷியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தமான உள்ளது. இதனால், அந்நாட்டில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதனால், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் கட்டுப்பாடுகளை விதிக்க ரஷிய அரசு தயக்கம் காட்டி வருகிறது.
இந்நிலையில், ரஷியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு புதிய உச்சமடைந்துள்ளது.
அதன்படி, அந்நாட்டில் நேற்று ஒரேநாளில் 28 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 35 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 973 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷியாவில் பதிவான அதிகபட்ச ஒருநாள் கொரோனா உயிரிழப்பு இதுவாகும். இதனால், அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 345 ஆக அதிகரித்துள்ளது.