தபால் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி

அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் பெப்சிஸ் நகரின் கிழக்கு லேமர் கேரியர் அனெக்ஸ் பகுதியில் தபால் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று வழக்கம்போல ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, தபால் அலுவலகத்தில் வேலை செய்துவந்த ஒரு ஊழியர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் தபால் அலுவலக ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தபால் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தபால் ஊழியர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.