வாய்க்குப் பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
வாய்க்குப் பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், ஆண் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டம், வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துல்கிரிய, மா ஓயாவுக்கு அருகிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உடுகம, அரத்தன பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது குடும்பஸ்தரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பன்னல பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், இவரைக் கடந்த 10ஆம் திகதி முதல் காணவில்லை என்று அவரது மனைவி பன்னல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துளள்ளது.
பிரேத பரிசோதனைக்காக கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.