அருங்காட்சியகங்களும் தொல்பொருள் நிலையங்களும் மீள திறக்கப்படவுள்ளன…
மத்திய கலாசார நிதியத்தின் கீழுள்ள அனைத்து அருங்காட்சியகங்களையும் தொல்பொருள் நிலையங்களையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்காக மீண்டும் திறக்கவுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்தது.
சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அருங்காட்சியகங்களையும் தொல்பொருள் நிலையங்களையும் பார்வையிட முடியும் என மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்தார்.
மத்திய கலாசார நிதியத்தின் கீழ் 16 அருங்காட்சியகங்கள் இயங்குகின்றன.
அத்துடன், பொலன்னறுவை, சீகிரியா, கதிர்காமம், காலி, கண்டி, அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொல்பொருள் நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.