21ம் திகதி பாடசாலை திறந்தாலும் அதிபர்கள் வரப் போவதில்லை
21 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் அதிபர்கள் கடமைக்கு வர மாட்டார்கள் என இலங்கை அதிபர்கள் சங்கம் கல்விச் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இந்த கடிதத்தை இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ கல்வி செயலாளருக்கு அனுப்பியுள்ளார்.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் பணிபுரியும் இலங்கை அதிபர்கள் சேவையின் அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்கள் இந்த முடிவை நடைமுறைப்படுத்துவார்கள் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.