அரசின் அசமந்தப்போக்கால் மீனவர்கள் பெரிதும் பாதிப்பு! – சஜித் குற்றச்ச்சாட்டு.

நாட்டில் அரசின் அசமந்தப்போக்கால் மீனவர் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராயும் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தால் மீனவர் சமூகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அரசு, பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பொம்மையாக மாறிவிட்டது. நாட்டில் உள்ள மீனவ சமூகத்தின் உரிமைகளை வெளிநாட்டு டொலர் தரகர்களிடம் ஒப்படைத்துள்ளது.

நாட்டின் மீன்பிடித் தொழிலில் புரட்சிகர மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்” – என்றார்.

அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தை அண்டியுள்ள மீனவர் சமூகத்தை எதிர்க்கட்சித் தலைவர் நேற்று சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.

இதன்போது, மீனவர்கள் தமது பிரச்சினைகளைக் கூறி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.


Leave A Reply

Your email address will not be published.