உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்.

2021 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்கும் முன்னோடி திட்டம் கொழும்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம, கொழும்பு, ஜெயவர்த்தனபுர மற்றும் பிலியந்தல கல்வி வலயங்களில் இந்த தடுப்பூசி வழங்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.