அண்ணாத்த படத்திற்கு இசை வழங்கிய குமரனுக்கு கொழும்பில் வரவேற்பு.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து தீபாவளி அன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்ற அண்ணாத்த திரைப்படத்தில் நாதஸ்வரத்தில் பாடலுக்கு பஙகளிப்பு செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி குமரன் என்பவர் இன்று காலை இலங்கையை வந்தடைந்தார்.
அப்போது அவருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய சினிமாவில் இலங்கையின் இசைக்கலைஞர் அதுவும் நாதஸ்வர இசைக்கலைஞருக்கு சந்தர்ப்பம் அளித்த முதன்முறை இதுவாகும்.