இராணுவத்தின் மித்ர சக்தி இராணுவப் பயிற்சி நிறைவு!

இந்திய – இலங்கை இராணுவத்தினர் ஒன்றிணைந்து நடாத்திய மித்ர சக்தி இராணுவப் பயிற்சி நிறைவுக்கு வந்துள்ளது.
ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் இறுதி பயிற்சி நடவடிக்கையை கண்காணித்தனர்.
இரண்டு வாரங்களாக இடம்பெற்ற மித்ர சக்தி இராணுவப் பயிற்சியில் இந்திய இராணுவப் படையினர் 120 பேரும் இலங்கை இராணுவத்தின் 120 பேரும் பங்கேற்றனர்.