இரத்தினபுரியில் எலிக் காய்ச்சலால் 7 பேர் பரிதாப மரணம்!
இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த ஒன்பது மாதங்களில் எலிக் காய்ச்சலால் 7 பேர் மரணமடைந்துள்ளனர் என்று இரத்தினபுரி மாவட்ட தொற்று நோய் பிரிவின் வைத்தியர் லக்மால் கோணார ஊடகங்களிடம் தெரிவித்துள்ள்ளார்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 379 பேருக்கு எலிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவிலேயே எலிக் காய்ச்சலால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் 36 பேரும், கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரிவில் 35 பேரும், பெல்மடுல்ல பிரதேச செயலாளர் பிரிவில் 34 பேரும், இம்புல்பென் பிரதே செயலாளர் பிரிவில் 32 பேரும், எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவில் 28 பேரும், வெலிகபெல பிரதேச செயலாளர் பிரிவில் 26 பேரும், எல்பாத்த பிரதேச செயலாளர் பிரிவில் 23 பேரும், இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவில் 22 பேரும், கலவான மற்றும் கொடக்கவெல பிரிவுகளில் 20 பேரும், எம்பிலிப்பிட்டி பிரிவில் 19 பேரும், குருவிட்ட பிரிவில் 18 பேரும், கஹவத்த பிரிவில் 14 பேரும், ஓப்பநாயக்க பிரிவில் 13 பேரும், நிவித்திகல மற்றும் உடலவலவ பிரிவில் 10 பேரும், இரத்தினபுரி நகர சபை பிரிவில் 08 பேரும், அயகம பிரிவில் 06 பேரும், கிரிஎல்ல பிரிவில் 04 பேரும் எலிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு 821 பேருக்கும், 2020ஆம் ஆண்டு 1,184 பேருக்கும் எலிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் எலிக் காய்ச்சலால் இரத்தினபுரி மாவட்டத்தில் உயிரிழந்த 44 பேரில் 52 சதவீதமானவர்கள் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சுரங்கப் பணியாளர்களாவர்” – என்றார்.