தேவாலயத்தின் உள்ளே வைத்து பிரிட்டிஷ் எம்.பி வெட்டிக்கொலை!
பிரிட்டனில் ஆளும் பழமைவாதக் கட்சி
யின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்
டேவிற் அமெஸ் (David Amess)
கத்தியால் வெட்டப்பட்டு உயிரிழந்துள்ளார். நண்பகல் மெதடிஸ்த தேவாலயம் ஒன்றினுள் வைத்து அவரைக் கத்தியால் பல முறை வெட்டினார் என்று கூறப்படுகின்ற 24 வயதுடைய சோமாலியா நாட்டு இளைஞர் ஒருவரைப் பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
எஸ்செக்ஸ்ஸில் (Essex) அமைந்துள்ள பெல்பெயார் மெதடிஸ்த தேவாலயத்தில் (Belfairs Methodist Church) டேவிற் அமெஸ் கோரமாக வெட்டிச் சாய்க்கப்பட்ட காட்சியை நேரில் கண்டவர்கள் அதிர்ச்சியால் கூச்சலிட்டனர் என்று கூறப்படுகிறது.
பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய அவருக்குத் தேவாலயத்தின் உள்ளே வைத்து அவசர சிகிச்சை
அளிக்கப்பட்டது. எனினும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
டேவிற் அமெஸின் சொந்தத் தேர்தல் தொகுதி நாட்டின் தென் கிழக்குப் பகுதி
யில்(Southend) அமைந்துள்ளது.(Southend constituency surgery).ஒவ்வொரு மாதமும்
மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில்
தனது தொகுதியில் அவர் ஆதரவாளர்
களைச் சந்திப்பது வழக்கம். அதற்காக
அங்கு வருகை தந்திருந்த சமயத்திலே
யே படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார். பொலீஸ் பயங்கரவாதத் தடுப்புக் கட்டளைப் பிரிவினர் கொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் கொலைக்கான கார ணம் என்ன என்பது தொடர்பில் எந்தத் தகவலும் உடனடியாக வெளியாக வில்லை.
மூத்த அரசியல்வாதியின் படுகொலை
பிரிட்டிஷ் நாடாளுமன்ற சமூகத்தினரை
யும் நாட்டு மக்களையும் பேரதிர்ச்சிக்குள்
ளாக்கி இருக்கிறது.”அனைவரது இதயங்
களும் அதிர்ச்சியாலும் துயரினாலும் நிறைந்து போயுள்ளன” என்று பிரதமர்
பொறிஸ் ஜோன்சன் கூறியிருக்கிறார்.
ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மிக
மோசமான ஒரு தாக்குதல் இது என்று
அரசியல் பிரமுகர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.டேவிற் அமெஸின்
மக்கள் சேவைகளையும், விலங்குகளது
உரிமைகளுக்காக விடாது ஒலித்துவந்த
அவரது குரலையும் அஞ்சலிச் செய்திக
ளில் பலரும் நினைவுகூர்ந்துள்ளனர்.
69 வயதான டேவிற் அமெஸ் ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். 1983 இல்
முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கு
தெரிவாகியது முதல் பிரபலமான ஓர்
அரசியல்வாதியாக விளங்கிய அவர்
ஜரோப்பிய ஒன்றியக் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாடுடையவர் ஆவார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கொல்லப்படு
கின்ற இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் டேவிற். தொழிற்கட்சி எம்பியாகியJo Cox 2016 இல் அவரது தொகுதியில் வைத்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
டேவிற் அமெஸின் கொலையை அடுத்து
நாடு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப்பை மீளாய்வு செய்து அதிகரிக்குமாறு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.