பாதிக்கப்பட்ட மக்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு.
பயங்கரவாத வன்செயல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று (15) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 338 பாயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வானது நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது இழப்பீடுகளுக்கானா அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றது. 96 இலட்சத்து 78 ஆயிரத்து 646 ரூபாய் 338 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் கலந்து கொண்டதோடு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் தனபால சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இக் காசோலை வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரசாந்தன், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ஜெய ரஞ்சித் , கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச் முஸம்மில், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் ராஜ் பாபு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஜெகநாதன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தவர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.