சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக சுற்றுலா.
கொவிட் தொற்று காரணமாக, சுகாதார வழிகாட்டல்களுக்கு கட்டுப்பட்டு, பல மாதங்களாக மூடப்பட்டிருந்த மத்திய கலாச்சார நிதியத்திற்கு உட்பட்ட அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் இடங்களையும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மீண்டும் திறக்க உள்ளதாக மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர், தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் காமினி ரணசிங்க அறிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகளின் புகழ்பெற்ற புனித சுற்றுலாத்தலங்களான,
♦️பொலன்னறுவை,
♦️சிகிரியா,
♦️கதிர்காமம்,
♦️காலி,
♦️கண்டி,
♦️அனுராதபுரம்
உள்ளிட்ட மத்திய கலாச்சார நிதியத்தினால் பராமரிக்கப்படுகின்றன நாட்டிலுள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களையும் சுகாதார விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக குறித்த சுற்றறிக்கைகளுக்கு ஏற்ப திறக்கப்படும்.
அத்துடன், உலக மரபுரிமை வலயமான காலி கோட்டையில் அமைந்துள்ள இலங்கையின் ஒரேயொரு கடல்சார் தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் திறந்தவெளி இப்பன்கடுவ கல்லறை அருங்காட்சியகம் , தம்புள்ளை புதைபடிவ பாதுகாப்பு மையம், அபயகிரிய சீகிரியா, கண்டி, பொலன்னறுவை, கதிர்காமம், யாப்பஹுவ, இரத்தினபுரி, மொனராகலை, நாமல் உயண, மற்றும்,
திருகோணமலை, தம்பதெனிய, ரிதீ விகாரை, யாழ்ப்பாணம், ரம்பா விகாரை ஆகிய இடங்களில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் திறக்கப்படும் என மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர், பேராசிரியர் காமினி ரணசிங்க அறிவித்துள்ளார்.