இந்திய அணி்க்கு முழுநேர பயிற்சியாளாக திராவிட் .
இந்திய அணி்க்கு முழுநேர பயிற்சியாளாக பதவி ஏற்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுவர், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் ராகுல் திராவிட் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கத் தொடர் வரை பயிற்சியாளராக மட்டும் இருக்கவே திராவிட் சம்மதி்த்தார். ஆனால், பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா கேட்டுக்கொண்டதையடுத்து,முழுநேர பயிற்சியாளராக பதவியேற்க ராகுல் திராவிட் சம்மதித்துள்ளார்.
ராகுல் திராவிட் 19வயதுக்குட்பட்ட மற்றும் இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோதுதான் ரிஷப் பந்த், ஷுப்மான் கில், ஆவேஷ் கான், பிரித்வி ஷா உள்ளிட்ட இளம் வீரர்கள் வளர்த்தெடுக்கப்பட்டனர். ராகுல் திராவிட் போட்ட அடித்தளத்தில்தான் ஆஸ்திரேலியாவில் கோலி உள்ளிட்ட முன்னிலை வீரர்கள் அவ்வப்போது இல்லாமல் போனாலும் ரகானே தலைமயில் புகழ்பெற்ற தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி.
இவரோடு பராஸ் மாம்ப்ரீ என்ற முன்னாள் பரோடா பவுலர் முழு நேர பவுலிங் பயிற்சியாளராக இருப்பார் என்று தெரிகிறது. இதுவரை புதிய பயிற்சியாளருக்கான எந்த விளம்பரத்தையும் பிசிசிஐ வெளியிடவில்லை என்பதால் விக்ரம் ராத்தோர் பேட்டிங் பயிற்சியாளராக நீடிப்பார் என்று தெரிகிறது. ரவி சாஸ்திரி ஆண்டுக்கு ரூ.8.5 கோடி ஊதியத்தில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், திராவிட்டுக்கு அதைவிடக் கூடுதலாக ஊதியம் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
அணியில் மூத்த வீரர்கள் பலருக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது, ரோகித் சர்மா அடுத்த ஆண்டு 35 வயதாகி விடுவார், கோலி 34 வயதான வீரர் ஆகி விடுவார், இது போக இஷாந்த் சர்மா, ஷமி உள்ளிட்டோரும் பழைய வேகம் காட்ட முடியாது, இஷாந்த் சர்மாவுக்கு இப்போதே பவுலிங் போய் விட்டது. புஜாரா அணியில் நீடிப்பது கடினம், ராகுல் திராவிட் மேற்பார்வையில் கே.எல்.ராகுல் இன்னும் நல்ல வீரராக உருவெடுப்பார்.
அதே போல் டெஸ்ட்டில் ஷுப்மன் கில் மீண்டும் தொடக்க வீரராக இறங்கும் போது ராகுல் திராவிட் என்ற வசிட்டர் இருந்தால் அவர் இன்னும் பிரமாதமாக ஆடுவார். அதே போல் பிரிதிவி ஷா, வெங்கடேஷ் அய்யர், பவுலர்களில் ஆவேஷ் கான், உம்ரன் மாலிக் போன்றவர்களும் வயதானோரை ரீப்ளேஸ் செய்து பும்ரா தலைமையில் சிறந்த வேகக்கூட்டணியாவார்கள், இவையெல்லாம் நடக்க திராவிட் இருந்தால்தான் சரிப்பட்டு வரும்.