அத்தியாவசியமற்ற பயணங்களை டிசம்பர் வரை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தல்.

டிசம்பர் இறுதி வரை தேவையில்லாமல் பயணம் செய்யாதீர்கள்-அசேல குணவர்தன
நாட்டில் தற்போதைய நிலையில் அத்தியாவசியமற்ற பயணங்களை டிசம்பர் இறுதி வரை கட்டுப்படுத்துமாறு சுகாதாரப் பிரிவு மக்களை வலியுறுத்துகிறது.
தற்போது நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 700 ஆக காணப்படுகின்றது என்றும் இந்நிலையில் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள இது பொருத்தமா சூழ்நிலை இல்லை என ஊடக சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.