கட்டுமுறிவுக் குள மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள்.
கட்டுமுறிவு குளத்து பழைய மாணவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக வாழைச்சேனை பாரதி கலை இலக்கிய மேம்பாட்டுக் கழக ஏற்பாட்டில் (17.10.2021) சின்னத்தம்பி சிவசாந்தன் அவர்கள் தன் தந்தையான அமரர் பூபாலப்பிள்ளை சின்னத்தம்பி அவர்களின் நினைவாக பெண்தலைமைதாங்கும் குடும்பம் மற்றும் மாற்றுத்திறனாளிகளைச் சேர்ந்த 35 பேருக்கு 1500ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் திரு.திருமதி. ஸோபா ஜெயரஞ்சித் மற்றும் பாரதி கல்வி வட்ட பழைய மாணவர்களும் சமூக இடைவெளிகளைப்பேணி சுகாதார நடைமுறைகளுடன் பொருட்களை வழங்கிவைத்தனர்.