நெல்லுக்கான நிர்ணய விலை அறிவிப்பு….
எதிர்வரும் பெரும்போகத்தில் ஒரு கிலோ நெல்லை 70 ரூபாவுக்கு வழங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளாா்.
ஒரு வருடத்தில் பொதுவாக 03 நிறுவனங்களினூடாக 100 பில்லியன் உரம் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.
இதேவேளை இந்தியாவிடமிருந்து கோரப்பட்டுள்ள 30, 000 மெட்ரிக் தொன்னில், ஒருதொகை நாட்டரிசி இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வர்த்தக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த தொகை இந்த மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.