மருதநகர் பகுதியில் மரண அச்சுறுத்தல் விடுத்த குழு கைது.

கல்குடா பொலிஸ் பிரிவின் மருதநகர் பகுதியில் வைத்து இரவு வேளையில் குழுவாக இயங்கி அத்துமீறி வீட்டுக்குள் உட்புகுந்து அட்டகாசம் குடும்பஸ்த்தர் ஒருவரை மரண அச்சுறுத்தல் விடுத்த ஒன்பது பேர் அடங்கிய குழுவினரை 17.10.2021ம் திகதி கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல் வஹாப் அவர்களும் சக பொலிஸ் அலுவலர்களுடன் இணைந்து சுற்றிவளைப்பின் போது கைது செய்திருந்தனர்.
அக் குழுவினரை 2021.10.18ம் திகதி இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 2021.10.25 வரை விளக்கமறியலில் இடப்பட்டுள்ளனர்.
மேலும் இக்குழுவினர் இரவு வேளைகளில் மதுபோதையில் இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து அமைதிக்கும்,சமாதானத்திற்கும் பங்கம் விளைவித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sathasivam Nirojan