அயர்லாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 3ஆவது தகுதிச்சுற்று போட்டியில் அயர்லாந்து – நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. இதில் கர்டிஸ் கேமபரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 106 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக மேக்ஸ் ஓடவுட் 51 ரன்களைச் சேர்த்தார். அயர்லாந்து அணி தரப்பில் கர்டிஸ் கேம்பர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியில் கெவின் ஓ பிரையன், பால்பிர்னி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த பால் ஸ்டிர்லிங் – கரெத் டிலானி இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
இதன்மூலம் 15.1 ஓவர்களிலேயே அயர்லாந்து அணி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.