பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
டி20 உலகக்கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்க வீரர்கள் மற்றும் ஜிம்மி நீஷமின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 37 ரன்களையும், ஜிம்மி நீஷம் 31 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் 24 ரன்களில் ஆரோன் ஃபிஞ்ச், மிட்செல் மார்ஷ் ஆகியோர் வெளியேறினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் – மார்கஸ் ஸ்டோய்னிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் ஸ்மித் 35 ரன்களையும், ஸ்டோய்னிஸ் 28 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் இறுதியில் ஆஷ்டன் அகர் அபாரமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் 19.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி, 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.