உணவு ஆர்டர் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை இந்திக் கற்றுக்கொள்ளாமல் ஏன் இருக்கிறீர்கள் என்று கேட்ட சோமேட்டோ- கொந்தளித்த நெட்டிசன்கள்

இந்திய அளவில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஸ்விக்கி, சோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் இருந்துவருகின்றன. இதில் சோமேட்டோ நிர்வாகம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாக இருந்துவருகிறது. முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த சோமேட்டோ டெலிவரி பாய், ‘நுகர்வோருக்கு வழங்க வேண்டிய உணவை எடுத்துச் சாப்பிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு, பெங்களூருவில் உணவு வழங்கும்போது பெண் நுகர்வோரைத் தாக்கியதாக சோமேட்டோ ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அந்தப் பெண்ணின் சோமேட்டோ ஊழியர் மிக மோசமாக நடந்துகொண்டது தெரியவந்தது. இந்தநிலையில், சோமேட்டோ நிர்வாகம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்பவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டில், ‘சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். அதில், நான் ஆர்டர் செய்த உணவு முழுமையாக இல்லாமல் இருந்தது. இதுகுறித்து சோமேட்டோ கஸ்டமர் கேரைத் தொடர்பு கொண்டது பணம் திரும்பக் கிடைக்காது. உங்களால் ஹிந்தியில் பிரச்னையை விளக்கமுடியவில்லை. ஒரு இந்தியராக இருந்துகொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது’ இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள விகாஷ், கஷ்டமர் கேர் உடனான ஸ்கிரீன்ஷாட்டையும் பதிவிட்டுள்ளார். அதனையடுத்து, #regectzomato என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகிவருகிறது.

இதுகுறித்து சோமேட்டோ நிர்வாகத்துக்கு ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ள தருமபுரி எம்.பி செந்தில்குமார், ‘எப்போதிலிருந்து ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியானது? தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு நுகர்வோர் ஏன் இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும்? அந்த அடிப்படையில் உங்கள் நுகர்வோரை இந்திக் கற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்குகிறீர்கள். உங்கள் நுகர்வோரின் பிரச்னையைத் தீர்த்துவையுங்கள். மன்னிப்பு கோருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.