புதிய கொரோனா வகைகள் இலங்கைக்குள் நுழைவதற்கான சாத்தியம்.

புதிய கொவிட்-19 வகைகள் இலங்கைக்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி ,சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்படுவதாலும் துறைமுகங்கள் மீண்டும் செயல்படுவதாலும், புதிய கொவிட்-19 வகைகள் நாட்டிற்குள் நுழையும் அபாயம் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ,இந்த காலகட்டத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ள சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைபிடிக்குமாறு பொது மக்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.