இந்தியாவில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து, துறை சார்ந்த நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திரத மோடி இன்று ஆலோசனை
கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து, துறை சார்ந்த நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திரத மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது பீப்பாய்க்கு 85 டாலராக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து எரிசக்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இதுதவிர கச்சா எண்ணெய் விலையை குறைப்பது குறித்து எண்ணெய் வள நாடுகளுடன் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 30 காசு விலை உயர்ந்து 103 ரூபாய் 31 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியுள்ளது.
டீசல் லிட்டருக்கு 34 காசு விலை அதிகரித்து 99 ரூபாய் 26 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.