மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு மேலும் நீடிப்பு…..

நாடுமுழுவதும் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு ,அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுதளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதற்கான உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்திருப்பதாக, இராணுதளபதி தெரிவித்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (20) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.