இங்கிலாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
டி20 உலகக்கோப்பை: மார்க் வுட் பந்துவீச்சில் சரிந்தது நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 73 ரன்களை விளாசினார். நியூசிலாந்து அணி தரப்பில் இஷ் சோதி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் டிம் செய்ஃபெர்ட் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய வந்த மார்டின் கப்திலும் 40 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் அந்த அணி 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களை மட்டுமே சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.