ஓமனை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது ஸ்காட்லாந்து.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஓமன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக லியாஸ் 37 , மசூத் 34 ரன்னும் எடுத்தனர்.ஸ்காட்லாந்து சார்பில் டேவி 3 விக்கெட், ஷ்ரீப், லீஸ்க் தலா விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. அதிகபட்சமாக கைல் கோட்சர் 41 47 ரன்கள் எடுத்தார். பெர்ரிங்டன் 31 ரன்னும், மேத்யூ கிராஸ் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இறுதியில், 17 ஓவரில் ஸ்காட்லந்து அணி 2 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஜோஷ் டேவிக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு ஸ்காட்லாந்து அணி முன்னேறியது.