இலங்கையில் உணவுப்பயிர் தேவைகள், நுகர்வு மற்றும் கிடைப்பனவு…
உள்ளூர் உணவு உற்பத்தியின் வினைதிறனை அதிகரிப்பதற்காக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமையொழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலையீட்டுடன் தேசிய திட்டமிடல் திணைக்களம், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மற்றும் உணவு மற்றும் பயிர் உற்பத்தி தொடர்பான விவசாய, கால்நடை மற்றும் கடற்றொழில் துறைகளுக்கு ஏற்புடைய அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் உணவுப்பயிர் தேவைகள், நுகர்வு மற்றும் கிடைப்பனவு தொடர்பான ஒப்பீட்டு ரீதியான ஆய்வுக்கற்கை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நெல், தானியம் உள்ளிட்ட அவரை இனப் பயிர்கள், மரக்கறி, பழவகைகள் மற்றும் தெங்கு போன்ற பயிர்ச்செய்கைகள், மீன்பிடி மற்றும் கால்நடை உற்பத்தி போன்ற அடிப்படை உணவுத் தொகுதி உள்ளடங்கலாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ் அறிக்கையை ஆராய்ந்து, அதன் வழிகாட்டலுக்கமைய 2022 – 2024 காலப்பகுதிக்கான உணவுப்பயிர்களின் இலக்குகள் உள்ளிட்ட செயற்பாட்டுத் திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்ட மற்றும் பிரதேச கமக்கார குழு மற்றும் பிரதேச வாழ்வாதாரக் குழுத் தலைவர்களுக்கும், மாவட்டச் செயலாளர்கள்ஃஅரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் தேவையான ஆலோசனைகள், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமையொழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக நிதி அமைச்சர் அவர்கள் அமைச்சரவையைத் தெளிவூட்டியதுடன், திட்டமிடப்பட்டுள்ளவாறு குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.