ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் மண்டேலா திரைப்படம்.
ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் யோகி பாபுவின் மண்டேலா திரைப்படம் இடம் பெற்றுள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்து கடந்த ஏப்ரல் மாதம் நேரடியாக விஜய் டிவியில் வெளியான படம் மண்டேலா. பின்னர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் மண்டேலா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தியா சார்பில் இந்த ஆண்டு மொத்தம் 14 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே படம் மண்டேலா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் மலையாளப் படமான ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்களை குவித்துள்ள நாயட்டு திரைப்படமும் ,வித்யா பாலனின் ஷெர்னி திரைப்படமும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த 14 படங்களில் ஒரு படம் தேர்வு செய்யப்பட்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பவார்கள். தற்போது இதற்கான திரையிடல் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.