31ஆம் திகதி அதிகாலை மாகாணங்களிடையேயான பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் – இராணுவத் தளபதி.

எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு மாகாணங்களிடையேயான பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற கொவிட்-19 தடுப்பு செயலணியின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதேவேளை ஒக்டோபர் 25 க்குப் பின் ரயில் சேவைகளும் மாகாணங்களுக்கிடையே தொடங்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.